அமைதி வேளை
அமைதி வேளை : இந்த அழகான உலகில் ஆண்டவர் நம்மைச் சுற்றி நிறைய அற்புதமான , அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்தியுள்ளார் . எல்லா உறவுகளிலும் ஒருவருக்கொருவர் இடையே உள்ள தொடர்பு மிகவும் அவசியமாக உள்ளது . தொடர்புச் சத்தங்கள் , செயல்கள் , இசை , எழுத்துக்கள் , அடையாளங்கள் , சின்னங்கள் மூலமாக வெளிபடுகிறது . கடவுள் எல்லா மனிதரையும் தம்மோடு தொடர்பு கொள்ளவும் , ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவுமே ( ஆதியாகமம் 2:19-22) தமது சாயலாக ( ஆதியாகமம் 1:27) உருவாக்கினார் . அமைதி வேளை கடுவுளோடு கூட நேரம் செலவிட்டு அவரோடு அர்த்தமுள்ள தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது ( ஏசாயா 63:7). அறிமுகவுரை : அமைதி வேளை என்பது ஒவ்வொரு விசுவாசியும் கடவுளோடு செலவிடப்படும் தனிப்பட்ட நேரம் அல்லது நியமனம் ( மாற்கு 1:35). அமைதி வேளையின் பொழுது நாம் துதிபாடல்கள் பாடலாம் , ஜெபிக்கலாம் , வேதாகமம் அல்லது அனுதின தியானத்தை வாசிக்கலாம் , தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கலாம் , அல்லது அமைதியாகத் தேவனை நோக்கிப்...